Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 03 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்துக்கு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுத்து, கப்பம் கோரிய நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
கிளிநொச்சி - இரத்தினபுரத்தை பிறப்பிடமாகவும் வவனியா - புதுக்குளத்தில் வசிப்பிடமாகவும் கொண்ட மாடசாமி சுதாகரன் (வயது 38) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன், 12 இலட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித் நபரை இன்று கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய போது, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் தன்னை இராணுவ புலனாய்வாளர் எனவும் தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்திருப்பதாகவும் தெரிவித்து, பலரிடம் கப்பம் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
31 minute ago