2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு போதைப்பொருளே காரணம்'

Administrator   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு அடிப்படை காரணமாக போதைப்பொருள் அமைகின்றது என கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் சி.சத்தியசீலன் தெரிவித்தார்.

கிளிநொச்சி முழங்காவிலில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற சிறுவர் முதியோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர் துஷ;பிரயோகத்துக்கு அடிப்படை காரணமாக போதைப்பொருள் அமைகின்றது. ஜனாதிபதி கூட தேசியக்கொள்கையில் போதைப்பொருள் ஒழிப்பினை முக்கியப்படுத்தியுள்ளார். முழங்காவில் பகுதியில் 25 கிலோகிராம் கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றி குற்றவாளிகளையும் கைதுசெய்துள்ளதாக அறிந்தேன். 

போதைப்பொருட்களைப் பரப்பும் நபர்களை சட்டத்தின்முன் தண்டிப்பதன் ஊடாக சமூகத்தினைப் பாதுகாக்கமுடியும். பொலிஸாரின் செயற்பாட்டுக்கு எனது பாராட்டுகள் என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .