Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என். நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட “கரை எழில் 2016” இல் தான் எழுதிய “கிளிநொச்சியும் மலையகத் தழிழர்களும்” எனும் சர்ச்சைக்குரிய கட்டுரையை தான் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அந்தக் கட்டுரை தொடர்பாக மனம் வருந்துவதாகவும் தமிழ்க் கவி, எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (18) கரைச்சி கலாசார பேரவைக்கு எழுதிய கடித்தத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “07.04.2017 அன்று கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட “கரை எழில்” நூலில் “மலையகத் தழிழரும் கிளிநொச்சியும்” எனும் கட்டுரையில் சில விடயங்கள், மலையக சமூகத்தை இழிவுப்படுத்துவதாக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறிப்பிட்டுள்ளன.
மேற்படி கட்டுரையில் ஒரு சில விடயங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டும், அவர்களுக்கும் எனக்குமான நல்ல நட்புறவு தொடர்வதற்காக எனது கட்டுரை தொடர்பில் மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன், குறித்த கட்டுரையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago