2025 ஜூலை 12, சனிக்கிழமை

'தேசிய மட்டத்தில் சாதனை படைத்தது கிளிநொச்சிக்கு பெருமையே'

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“2016 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் மேசை பந்து போட்டியில் தங்கப்பதகம் வென்றமை  மற்றும் ஏனைய போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றமை, கிளிநொச்சிக்கு பெருமை சோ்த்த விடயம்” என  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபா் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சாதனையாளா் கௌரவிப்பு நிகழ்வின் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

அவா் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக றோல் போல் விளையாட்டை அறிமுகப்படுத்தி, அதனை முதல் முதலாக நேரடியாக பாா்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திய தந்த ஏற்பாட்டாளருக்கு நன்றி.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில்  2016 இல் தேசிய மட்டத்தில் மேசை பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி பாலகிருஸ்னண் தனுசியா,தேசிய மட்டத்தில்  வெள்ளிப் பதகம் வென்ற ரசீந்திரன் தமிழ்மகள், மற்றும் கோலுங்ன்றி பாய்தலில் வெங்கலப் பதக்கம் வென்ற யோநாதன் சுகிர்தா ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் பாராட்டத்தக்கது.

பிள்ளைகளின்  விளையாட்டுகளுக்கு பெற்றோர் அதிக ஊக்கத்தை வழங்கி வருகிறாா் அது மகிழ்ச்சிக்குரியது. இந்த விளையாட்டு வீரா்களை நான் மனதார பாராட்டுகிறேன். குறிப்பாக றோல் போல் விளையாட்டில் இலங்கையின் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள்   உள்வாங்கப்பட்டு அவா்கள் பங்களாதேஸ் நாட்டில் இடம்பெறுகின்ற உலக றோல் போல் போட்டியில் பங்குபற்றவுள்ளனா்.

அவர்களுக்கும் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .