Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 30 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
இலங்கையின் சுகாதார துறை, ஏனைய தென்கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தாராளமான சேவையை வழங்கி வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
'தொற்றுநோய்களை கட்டுப்படுத்தினாலும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. இவ்வாறாக தொற்றாத நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு தொழிநுட்பசாதனங்களின் அதிகூடிய பாவனையும் காரணமாக அமைந்துள்ளது' எனவும் அவர் கூறினார்.
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும், மருத்துவ முகாமும் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் உரையாற்றுகையில், 'இன்று இலங்கையில் அதிகளவிலான மரணங்கள் தொற்றா நோய்களின் தாக்கத்தினாலும் விபத்துக்களினாலும் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான மருத்துவ முகாம்களை கிராமங்களில் நடாத்துவதானது பாராட்டப்படவேண்டியதொன்றாகும்' என்றார்.
1916ஆம்; ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்தபாடசாலை ஆரம்பத்தில் புதுக்குளம் குளத்துக்கு அருகாமையில் இயங்கிவந்த நிலையில் 1960களில் புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம் சந்திக்கு இடமாற்றப்பட்டது. 1யு தரத்திலான இந்தப்பாடசாலை வவுனியா வடக்கு கல்விவலயத்தின் முதன்மையான பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், பாடசாலையின் பழைய மாணவருமாகிய வைத்தியர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், பாடசாலையின் பழைய மாணவனும் உளநல மருத்துவருமாகிய வைத்தியர் சி.சுதாகரன், வடக்கு கல்விவலய ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி தா.அமிர்தலிங்கம் ஆகியோருடன் மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .