Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி உள்ளமை மற்றும் கைவிடப்பட்ட தொழிற்சாலைகள் மீள இயங்காத நிலையில் காணப்படுகின்றமையே மாவட்டத்தின் வறுமை நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, கரைதுரைப்பற்று, மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலர் பிரிவுகளில் இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புக்கள் இன்றியுள்ளனர்.
மாவட்டத்தில் அதிக வருமானம் பெறக்கூடிய ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை இன்றுவரை மீள ஆரம்பிக்கப்படாத நிலை காணப்படுகின்றது,
அத்துடன் உள்ளுர் உற்பத்திகளை மேற்கொள்ளும் சிறிய சிறிய தொழில்கள் கைவிடப்பட்டுள்ளதுடன் நவீன வருகையால் மட்பாண்ட உற்பத்தி உள்ளிட்ட குடிசைக்கைத்தொழில்கள் அற்றுப்போயுள்ளன.
அதிகளவான நெல்லுற்பத்தி செய்யும் மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருந்தொகை நெல் மாவட்டத்தில் இருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
நெல்லை கொள்வனவு செய்து அரிசி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்த 50க்கும் மேற்பட்ட அரிசியாலைகள் செயலிழந்துள்ளன.
“இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் மற்றும் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை மீள இயங்க வைப்பதன்மூலம் வறுமை நிலைமைப் போக்க முடியும்” என தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago