Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 ஜனவரி 12 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து சிரமதான பணியை, நேற்று முன்தினம் முன்னெடுத்ததுடன், கடந்த 11 நாட்களில் 14 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் வரை டெங்கு நோய் அற்ற மாவட்டமாக இனங்காணப்பட்ட கிளிநொச்சியில், கிராஞ்சி, சிவபுரம், மலையாளபுரம், அம்பாள்குளம், கணேசபுரம், வலைப்பாடு, கல்மடு, செல்வாநகர் மற்றும் விசுவமடு ஆகிய, இடங்களிலிருந்து 14 பேர் டெங்கு தாக்கத்துக்கு இலக்காகி, கிளிநொச்சிப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவிவரும் டெங்கு காச்சலில் இருந்து மக்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனம் கண்டு முற்றாக அழிக்குமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago