2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'நீர் மூலகங்களை கண்டுபிடித்து குடிநீர்த் திட்டங்கள் ஆரம்பியுங்கள்'

George   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள கிராமங்களுக்கு, குடிநீர்த் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்” என கிராமங்களின் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

“வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், பூநகரியின் பல கிராமங்கள், கண்டாவளையின் தட்டுவன்கொட்டி, உமையாள்புரம், குமரபுரம், கல்லாறு என பல கிராமங்கள், குடிநீர் நெருக்கடி மிகுந்த கிராமங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

வரட்சியான காலங்களில் பல கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கின்ற நிலைமை தற்போதும் தொடர்கின்றது. பூநகரியில் வரட்சியான காலநிலை காணப்படும்போது, பரந்தனில் இருந்து கூட குடிநீர் எடுத்துச் செல்லப்படும் நிலையில், கிராமங்களில் காணப்படும் நீர் மூலகங்களை இனங்கண்டு குடிநீர்த் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இவ்வாறான நெருக்கடி நிலையை  தவிர்த்துக்கொள்ள முடியும்

1,100க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட கோணாவில் கிராமத்தில் குடிநீர் நெருக்கடி, குளிப்பதற்கான நீரின்மை காரணமாக மூன்று கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் மக்கள் நடந்து சென்று புதுமுறிப்புக் குளத்தில் குளிப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

இக்கிராமத்தில் குடிநீர்த் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள் மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் நிலங்கள் உவரடைவதன் காரணமாக, நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எனவே, நீர்த் திட்டங்களை முன்னெடுக்க வேண்மடும்” என, பொது அமைப்புகளின் ​வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .