2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

நுளம்பு வளரும் சூழல் கண்டுபிடிப்பு

Niroshini   / 2017 மார்ச் 31 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில் 1,196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் தேசிய நுளம்பு  கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாள் நடவடிக்கையின் போது 4,318 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 1,196 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன், 45 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகளும் காணப்பட்டன.

அத்தோடு, 1,196 இடங்களில் 1,057 இடங்கள் இன்றைய தினமே சுத்திகரிக்கப்பட்டதுடன், 122 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கொடுக்கப்பட்டுள்ளது என, கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளான நேற்று, கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது மொத்தமாக மாவட்டத்தில் உள்ள வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமாணப்பகுதிகள், மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய 4,318 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேற்படி 1,196 இடங்களில் 1,057 இடங்கள் இன்றைய தினம் சுத்திகரிக்கப்பட்டதுடன், 122 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .