2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

15 பாடசாலைகளுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரிக் கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகள் கடுமையான குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக பூநகரிக் கோட்டக் கல்வியதிகாரி சு.தர்மரட்ணம், இன்று செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.

பூநகரி மகா வித்தியாலயம், ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயம் உட்பட பதினைந்துப் பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது.

இப்பாடசாலைகளுக்கு பூநகரி பிரதேச சபை குடிநீர் வழங்கலை மேற்கொண்டுள்ள போதிலும் அக்குடிநீர் போதுமானதாக இல்லை.

பாடசாலைகளில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி பூநகரியில் மருத்துவமனை உட்பட பாடசாலைகளில் நிலவும் குடிநீர் நெருக்கடியினை தீர்ப்பதற்கு குடிநீர்த் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு பூநகரி பொது அமைப்புகள் பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெறும் கூட்டங்களில் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

பூநகரி வாடியடிச் சந்தியில் இராணுவம் முகாம் அமைந்துள்ள காணியில் தாராளமான குடிநீர் வழங்கும் கிணறு உள்ளதாகவும் இப்பகுதி மக்களினால் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .