Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வடக்கில், உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டி சீரழிக்கும் நுண்நிதி (மைக்ரோ கிரடிற்) நிறுவனங்களை இழுத்து மூட கோரி, வவுனியா நகர மத்தியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு கொடுப்பனவு (லீசிங்) என்ற பெயரில் மக்களை சுரண்டி கொள்ளையிடும் நிறுவனங்களை மூடுமாறு கோஷம் எழுப்பப்பட்டது.
இதேவேளை, 'இவ்வாறான நிதி நிறுவங்களை மூடுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் சமூர்த்தி வங்கி, கூட்டுறவுச்சங்கங்கள், கிராமிய வங்கிகள் ஊடாக மக்களுக்கு சிறு கடன்களை அதிகமாக வழங்க முன்வரவேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேல் மாகாணத்தை விட, வட மாகாணத்தில் உள்ள நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளதுடன் இது வடக்கு மக்களை திட்டமிட்டு சுரண்டுகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நுண் நிதி கடன் திட்டங்களின் மூலம் பெண்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி ஆரோக்கியமான குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்களை சீரழிப்பதன் ஊடாக எமது சமூகத்தை ஊனமாக்க சில சக்திகள் செயற்படுவதாகவும் இதன்பொது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago