2025 ஜூலை 05, சனிக்கிழமை

74 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட 74 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது, பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்ப்பட்ட 43 பேருக்கு தலா 01 ஏக்கர் மேட்டுக்காணிக்கான அனுமதிப்பத்திரமும் 29 பேருக்கு தலா அரை ஏக்கர் காணிக்கான அனுமதிப்பத்திரமும் 02 பேருக்கு தலா 01 ஏக்கர் வயல் காணிக்கான அனுமதிப்பத்திரமும் இன்று வழங்கி  வைக்கப்பட்டது.

இதேவேளை அடுத்த கட்டத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கவுள்ளவர்களுக்கான காணிக் கச்சேரியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக  காணி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .