Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“உணவை பெற்றுக்கொள்ளவே நாங்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளோம். எமக்கு உணவுக்கான உதவிகளை வழங்க முன்வர வேண்டும்” என, கேப்பாபுலவு காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கேப்பாப்பிலவு மக்கள், படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்ககோரி, 50 நாட்களை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துள்ளது. ஆனாலும், இது வரையில் ஆக்கபூர்வமான எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை. எமது காணிகள் விடுவிக்கப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்.
50 நாட்களாக தகரக் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் துன்பங்களை அனுபவித்த வருகின்றோம். ஒரு வேளை உணவிற்கே பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றோம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர்? வைத்தியசாலைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். உயிர் பிரிந்தாலும் சொந்தக் காணிகள் விடுவிக்கப்படும் வரை இங்கிருந்து செல்லப் போவதில்லை” என்றனர்.
“கடந்த பல வாரங்களாக பாண், பருப்பு, சோறு ஆகியவற்றை மாத்திரமே உற்கொண்டு வருவதால், உடல் ரீதியாக சோர்வடைந்து காணப்படுகின்றோம். இங்கு வரும் பல அரசியல்வாதிகள், சிறிது நேரம் மக்களுடன்உரையாடிவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டுச் சென்றுவிடுகின்றனர்” என்றனர்.
போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகிலுள்ள வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்குச் சென்று அங்கு உடைக்கப்படுகின்ற தேங்காயை எடுத்து அதனைக் கொண்டே சமைத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கும் வரையாவது, தங்களது உணவுத் தேவைகளை பூர்த்திச் செய்ய உதவிகளை வழங்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago