2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பன்றி வளர்ப்பால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கொக்குளாய் - கிழக்கு ஐயங்கோயில்வெளி வயல்காணிகளில் சிங்கள மக்கள் பன்றி வளர்ப்பில் ஈடுபடுவதால் தமக்கு நெற்செய்கை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

1984ஆம் ஆண்டு கொக்குளாயிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில் சிங்கள மக்கள் தமது காணிகளை கையகப்படுத்தியுள்ளதுடன், தமது வயல் காணிகளில் பன்றிகளை வளர்த்து வருவதாகவும் தமிழ் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டு இறுதி கட்ட யுத்தம் நிறைவடைந்த நிலையில் 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமது 7 ஏக்கர் வயல்காணிகளில் பயிற்செய்கை மேற்கொள்ளமுடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சிங்கள மக்கள் முகத்துவாரத்தில் தொழில் செய்யும் நோக்கோடு தமது காணிகளை கைப்பற்றி வீடுகளை அமைத்துள்ளதாகவும் வயல் காணிகளில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமது காணி தொடர்பில் கதைத்தால் தமக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக காணிக்கு செல்வதில்லை எனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .