2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'முத்தையன்கட்டை நினைத்து அச்சப்படாதீர்கள்'

George   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு முத்தையன்கட்டுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காலபோக நெற்செய்கையிலும் அடுத்தாண்டு சிறுபோகத்திலும் ஈடுபடவுள்ள விவசாயிகள், நீர் விநியோகம் தொடர்பாக அச்சப்பட தேவையில்லை” என, முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.

முத்தையன்கட்டுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறினார்.

“அணைக்கட்டு, வான்பகுதி கதவுகள் பொருத்தும் வேலைகள் நிறைவடைந்துள்ளன. காலபோகம் மற்றும் அடுத்தாண்டு சிறுபோகத்துக்கான நீர்விநியோகம் தொடர்பாக விவசாயிகள் அச்சங்கொண்டு இருப்பதாக அறியமுடிகின்றது. இதில் அச்சப்படத் தேவையில்லை. விவசாய முயற்சிகளுக்கான நீர்விநியோகம் சிறந்த முறையில் விநியோகிக்கப்படும்” என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .