2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'முதியார் இல்லங்களில் நகரத்து முதியோர்களே அதிகம்'

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“கிராமத்தைச் சேர்ந்த முதியோர்களை விட, நகரத்தைச் சேர்ந்த முதியோர்களே  முதியோர் இல்லங்களில் அதிகமாக உள்ளனர்” என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி செல்வாநகா் கிராமத்தில் இடம்பெற்ற முதியோர் சிறுவர் தின கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சனிக்கிழமை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“முதியோர்கள் எம் சமூகத்தின் பொக்கிஷங்கள், அவர்களுக்குரிய கௌரவம் கொடுக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மூத்த பிரஜைகள் சங்கம் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை, கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .