Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:18 - 1 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
சர்வதேச முதியோர் தினத்தையிட்டு, வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை, பாடசாலை முதல்வர் சுப்பையா அமிர்தலிங்கம் தலைமையில் 'முதியோரைப் பேனுவோம் ' நிகழ்வு நடைபெற்றது.
முதியோரின் மகத்துவம், மாணவர்கள் முதியோரைப் பேணுவதன் அவசியம், இளைய சமூகத்தினர் வளர்ச்சியில் முதியோர்கள் முக்கியத்துவம், முதியோரின் விழுமியங்கள் என்பன தொடர்பாக வவுனியா மாவட்ட சமுகசேவைகள் உத்தியோகத்தர் திரு.செ.ஸ்ரீனிவாசன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் விளக்கவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பண்டாரிகுளம் முதியோர் சங்க செயலாளர் சண்முகராஜா, பொருளாளர் அருளானந்தம் மற்றும் உறுப்பினர்கள் சமூகசேவை உத்தியோகத்தர் ச.சோபனா அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.தவீசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
'தலைமுறைப் பாகுபாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தல்' எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் வடமாகாணத்தில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் முதியோர் தினத்தை கொண்டாடுகிறது. அதிபர், ஆசிரியர், மாணவர்கள் ஆர்வமாக நிகழ்வில் கலந்து கொண்டதுடன் முதியோருக்கான கௌரவத்தையும் வழங்கினர். தொடர்ந்து இந்நிகழ்வுகள் ஏனைய பாடசாலை மட்ட்களில் நடைபெறவுள்ளன.
முகம்மது இஸ்மாயில் Thursday, 03 October 2019 02:00 PM
முதியோர் தினம் கொண்டாடுவது நல்ல செயல்பாடுதான்.ஆனால் அவர்களின் சொல்லொண்ணா பிரச்சினை கள் பல உண்டு. கிடைக்க வேண்டிய பணப்பலன் கள் கிடைப்பதில் தாமதம்.ஏழ்மைப்பட்டமுதியோர்களுக்கு ஒய்யூதியம் கிடைக்க அரும்பாடு படவேண்டியது உள்ளதுசட்டங்கள் இருந்தும் முதியோர்கள் துன்புறுத்தப்படுகின்றன்ர்.நோய்கள் குடிகொண்டுள்ளது. கூறிக் கொண்டே சொல்லாம்
Reply : 10 23
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago