Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 28 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முன்பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக கல்வி அமைச்சருடன் தாம் கலந்துரையாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், தெரிவித்துள்ளார்.
மன்னார் வலய முன்பள்ளி ஆசிரியர் சங்கம் நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் 2017, மன்னார் நகரசபை மண்டபத்தில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றபோது, அங்கு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை மகத்தானது. அவர்களின் மாதாந்த சம்பளம் 4, 000 ரூபாய் ஆக இருப்பதனால், தற்போதைய பொருளாதார நிலையில் ஒரு சிறு பிரச்சினையை கூட சீர்செய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றது. அதனை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், இந்த ஆண்டுக்கான எனது நிதி ஒதுக்கீட்டில், அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கு முன்பள்ளி ஆசிரியர் சங்கத்துக்கு 1 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago