2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'முன்பள்ளிகள் யுத்த காலத்தை நினைவுப்படுத்துகின்றன'

George   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் முன்பள்ளிகள் காணப்படுகின்றமை யுத்த காலத்தை மீளவும் நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளன' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

'முல்லைத்தீவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் செயற்படும் முன்பள்ளிகள் வலய கல்வி பணிமனையின் கீழ் ஒப்படைக்க வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பனிக்கன்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையம் மற்றும் கலைமகள் முன்பள்ளி கட்டட திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

'கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் முன்பள்ளிகள் இயங்கி வருகின்றமையை  ஏற்றுக்கொள்ள முடியாது, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை யுத்த கால நினைவுகளுக்குள் வைத்திருக்கின்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கும் முன்பள்ளிகளுக்கும் என்ன தொடர்புள்ளது இது வலயக்கல்லிப்பணிமனையின் கீழ் இயங்கவேண்டும் இவ்வாறு முன்பள்ளிகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின்கீழ் வைத்திருப்பதால் இந்த அரசாங்கம் போர்க்கால சுழலையே நினைவுபடுத்தி நிக்கிறது. எனவே இவர்கள் இதிலிருந்து  விலகி முன்பள்ளிகளை  வலயக்கல்விப் பணிமனையிடம் ஒப்படைக்கவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .