2025 ஜூலை 16, புதன்கிழமை

'மூன்று மாத சிவப்பு இன நெல் ​வேண்டும்'

George   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“மூன்று மாத சிவப்பு இன நெல்லைப் பெற்றுத் தாருங்கள்” என, அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம் என்பவற்றுக்கான சிறுபோக கூட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

கூட்டத்துக்கு வருகை தந்த விவசாயிகள், “கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று மாத சிவப்பு இன நெல்லைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுங்கள்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, “கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று மாத சிவப்பு இன நெல் இல்லை. அதனை எதிர்காலத்திலே வேறு மாவட்டங்களில் இருந்து பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை எடுப்போம்” என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் ஆட்டக்காரி, நந்தசேன போன்ற நெல்லினங்களே விவசாயிகளினால் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூன்றரை மாத சிவப்பு நெல்லினங்கள். ஆட்டக்காரி, நோய்களை உருவாக்கும் நெல்லினம் என்பதால் கிளிநொச்சியில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை விவசாயிகள் பயன்படுத்தினால், ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X