2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

4 மீனவர்களுக்கு அபராதம்

George   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

நந்திக் கடல்நீரேரியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.எஸ்.ஸம்சுதீன், இன்று வியாழக்கிழமை (15) தீர்ப்பளித்தார்.

மேற்படி 4 மீனவர்களும் மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 80 கூட்டு வலைகளையும், 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு தங்கூசி வலைகளை கைப்பற்றினர்.

மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது, அவர்களுக்கு அபராதம் விதித்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகளை தீயிட்டு அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .