2025 ஜூலை 07, திங்கட்கிழமை

40,750 மில்லிலீற்றர் கசிப்பு மீட்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு வலைஞர்மடம், முள்ளியவளை மற்றும் கேப்பாப்புலவு ஆகிய பகுதிகளில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 40,750 மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (29) மற்றும் செவ்வாய்க்கிழமை (30) ஆகிய நாட்களில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முல்லைத்தீவு வலைஞர்மடம் சம்புமோட்டைக் காட்டுப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 40 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பினைக்கொண்டு சென்ற இரண்டு பேரைக்கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமை (30) முள்ளியவளை கேப்பாப்புலவு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 40,750 மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .