Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 27 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
“சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதையே தனது அரசியல் பயணமாகக் கொண்டுள்ளது” என, அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற, அமைப்பின் செயற்பாட்டாளர்களுடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்கள் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களை மறுதலித்தது கிடையாது. தவறுகள் விடாதவர்கள் மனிதர்களே அல்ல. ஆனால், தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்காலம் நோக்கி பயணிப்பதுதான் முக்கியமானது. அதனை செய்திருக்கின்றோம்.
எங்களுடைய அமைப்பானது சமூக,சாதி சமய வேறுபாடுகளை கடந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும். அதுதான் அமைப்பின் நோக்கம். கடந்த காலத்திலும் கூட மக்கள் எங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளார்களோ, எங்கு பாரபட்சங்கள் நடந்துள்ளதோ அங்கேயே அதிகம் பணியாற்றியிருக்கின்றோம். ஆகவே எதிர்காலத்திலும் நாங்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவது கிடையாது” என்று கூறியுள்ளார்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago