Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மணல் அகழ்வுக்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள் எதிரான குரலினை எழுப்பாததன் காரணமாகவே தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவதற்கு முக்கிய காரணமாகவுள்ளது.
மீள்குடியேற்றத் தொடக்கத்தில் கிராமங்களில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினை கண்காணிக்கின்ற பொறுப்புகளில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தற்போது கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வீட்டுத்திட்டத்துக்கென மட்டும் வழங்கப்பட்ட அனுமதிகளை தவறாகப் பயன்படுத்தி பிற மாவட்டங்களுக்கு மணலினைக் கொண்டு செல்லும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இம்மணல் அகழ்வு தொடர்பாக கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கண்டு கொள்வதில்லை.
ஒரு கிராமத்தின் வளத்தினைப் பாதுகாக்க வேண்டிய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மௌனமாக இருப்பதன் காரணமாகவே களவாக மணல் கொண்டு செல்பவர்கள் துணிச்சலுடன் கிராமங்களிலிருந்து மணலைக் கொண்டு செல்கின்றார்கள்.
அத்துடன், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதன் காரணமாக கிராம அபிவிருத்திச் சங்கங்கள் பல மௌனமாக இருக்கின்றன.
தவறுகளை பிரதேச செயலருக்கும் மாவட்டச் செயலாருக்கும் அறிவிக்க வேண்டிய பொறுப்பு கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இருக்கின்றன. வேலியே பயிரை மேய்வது போல கிராம அபிவிருத்திச் சங்கங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதன் காரணமாக பிரதேச செயலகத்துக்கோ மாவட்டச் செயலகத்துக்கோ மணல் அகழ்வு தொடர்பான தகவல்கள் தெரியப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மணல் அகழ்வு நடைபெறும் கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025