2025 ஜூலை 16, புதன்கிழமை

'மழை பெய்தால் பயிர் நாசமாகும்'

George   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, கோணாவில், யூனியன்குளம் கிராமத்தில் மழைகாலங்களில் வெள்ளம், வயல் நிலங்களுக்குள் பாய்வதன் காரணமாக, நெற்பயிர்ச் செய்கை அழிவடைந்து வருவதாக கிராம விவசாயிகள் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
'கோணாவில் இருந்து யூனியன்குளம் வழியாக அக்கராயன் பிள்ளையார் கோவில் வரையான வீதியில் இரு இடங்களில், மழை காலத்திலும் அக்கராயன்குளம் திறந்து விடப்படும் சந்தர்ப்பங்களிலும் வீதியினைக் குறுக்கறுத்துப் பாய்கின்ற வெள்ளம், வயல் நிலங்களுக்குள் செல்வதன் காரணமாக ஆண்டுதோறும் பயிர் அழிவு ஏற்படுவதாகவும் இதனைத் தடுப்பதற்கு மண் அரண்கள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் குளத்தின் வலது கரை வாய்க்கால் பகுதியிலேயே வெள்ளத்தினால் பயிர் அழிவு ஆண்டுதோறும் ஏற்படுகின்றது. மண் அரண் அமைத்து வயல் நிலங்களுக்குள் வெள்ளம் பரவாமல் இருக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட​வேண்டும்” என,  யூனியன்குளம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X