2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

151 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலக பிரிவில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 151 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது.

இந்திய துணைத்தூதுவர் திரு. நடராஜனால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன. மாங்குளம், நீதிபுரம் பகுதியில் 50 வீடுகளும் ஒலுமடுப்பகுதியில்  57 வீடுகளும், தச்சடம்பன் பகுதியில் 16 வீடுகளும் கையளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பெரிய இத்திமடு கிராமத்துக்கு சென்ற இந்திய துணைத்தூதுவர்,  பெரிய இத்திமடு விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை நிகழ்வுகளின் பின்னர், 28 பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .