Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
அதிகரித்து வரும் வெப்பத்தை தணிப்பதற்காக, அபிவிருத்தி கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட மரநடுகை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்தம் காரணமாக முல்லைத்தீவு நகரம் பெரும் அழிவுகளைக் கண்டது.
2004ஆம் ஆண்டில் டிசெம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். சொத்துகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. இதனால், முல்லைத்தீவு நகரத்துக்கு வளம் சேர்த்த பெருமளவு பனை மரங்கள், நிழல் தரும் மரங்களும் அழிவடைந்தன.
2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர், முல்லைத்தீவு நகரத்தில் கட்டம் கட்டமாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு நகரச் சூழலில் கடற்கரை உட்பட சகல பகுதிகளிலும் மர நடுகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில், நகரத்தில் மரங்களை நடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், இதுவரை மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் முல்லைத்தீவு நகர பகுதிகளில் கூடுதலான வெப்பத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
“முல்லைத்தீவு நகரில் மரங்களை நடுவதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago