2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'விவசாய பண்ணையிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள்'

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, வட்டக்கச்சி விவசாய பண்ணையில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினரை வெளிறே்றி விவசாய பண்ணையை உரியவர்களிடம் கையளிக்குமாறு கோரி, ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வட்டக்கச்சி விவசாய பண்ணை முன்பாக ஒன்றுசேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

இதன் போது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கொடுக்குமாறு கோரி, மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், விவசாயிகள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .