Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Niroshini / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“கடந்த 30 வருடங்களுக்கு முன்பு எமது சொந்த இடங்களை விட்டு உடுத்திய ஆடையுடன் வெளியேறிய நாங்கள் மீண்டும் எமது சொந்த ஊரில் குடியேறக்கூடிய சந்தர்ப்பத்தை இறைவன் எமக்கு அமைத்துத் தந்திருக்கின்றான். இதற்கு காரணம் அவன் நம் மீது கொண்டுள்ள இறக்கம் தான். இன்று எமது சமூகத்தை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கின்றது” என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொண்டச்சி கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய வீடுகளை நேற்று (14) வெள்ளிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
எனது பதினாறு வருட அரசியலில் 20,000 வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன். இன்னும் கட்டிக்கொண்டு இருக்கின்றேன் இந்த வீடுகள் வழங்கும் பொழுது நீங்கள் எந்த மதம் என்று கேட்கவில்லை.
நீங்கள் எந்த கட்சி என்று கேட்கவில்லை நீங்கள் எந்த இடம் என்றும் கேட்கவில்லை. தமிழராக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்கள் எந்த கட்சியென்றாலும் சரி இறைவன் சாட்சியாக மனசாட்சிக்கு துரோகமின்றி அனைவருக்கும் வீடுகளை வழங்கினேன்.
பாதிக்கப்பட்டவர்களை வைத்து நான் அரசியல் செய்ய முனையவில்லை. எனக்கு கிடைத்த பதவியின் மூலம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகின்றேன்.
என்னை அழித்துவிட்டால் அவர்கள் இங்கு கொடி கட்டி பறக்க முடியுமென சிலர் நினைக்கின்றார்கள்.
ஆனால், நீங்கள் சிந்திக்க வேண்டும் வன்னிக்கு மட்டுமல்ல இந்த வடக்குகே இருக்கின்ற அமைச்சர் நான் மட்டும்தான் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago