2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'வடகிலுள்ள சிங்களவர்களும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டனர்'

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடக்கு - கிழக்கில் நடந்த யுத்தத்தில்;, தமிழ் பேசும் சமூகத்துக்கு நடந்த அழிவுகளைப்போல, வடக்கில் வாழ்ந்த குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள மக்களும் வீடுகளை இழந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்து, பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்' என வடமாகாண சபை உறுப்பினர் அண்ணிஹாமிகே ஜயதிலக்க கூறினார்.

வவுனியா வடக்கு, ஈரப்;பெரியகுளத்தில் சிங்கள மக்களுக்கென அமைச்சர் ரிஷாட்டின் சொந்த முயற்சியினால் சுமார் 25 வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா, நேற்;று வியாழக்கிழமை (02)  நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உறையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு  தொடர்ந்து உறையாற்றிய அவர், 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொந்த வீடில்லாத குறையை நிவர்த்திக்கும் நோக்கிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது சுய முயற்சியில் வீடுகளைக் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்' எனக் கூறினார்.

'வவுனியாவில் மட்டுமன்றி மன்னாரிலும், அமைச்சர் வீடுகள் அமைத்து வருகிறார். இது மாத்திரமன்றி மின்சாரம் மற்றும் ஏனைய வசதிகளையும் மேற்கொண்டு வருகின்றார். வடமாகாணத்தில் ஒரே ஒரு அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில், அவரை இட்டு நாம் பெருமை அடைகிறோம்.

வடமாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே முன்னின்று செயற்பட்டு வருகின்றார். இந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டுமென அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுத்த கோரிக்கைகளின் விளைவாகவும், அமைச்சரவைக்கு ஏனைய சில அமைச்சர்களுடன் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கிணங்க சிங்கள முஸ்லிம் மக்களுக்கு வடக்கில் 21663 வீடுகள் வழங்கப்படவுள்ளன.' என மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில், அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் முத்து முஹம்மத், பொதுசனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .