2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

15 வயது சிறுமி துஷ்பிரயோகம் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பளைப் பகுதியில் 15 வயது சிறுமியi பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம், இன்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி பளைப் பகுதியில் இயங்கிய விடுதியில் வைத்து குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகப் பளைப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவரைக் கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 04ஆம் திகதி ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் விடுதியையும்; சீல் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதியின் முகாமையாளர் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்தார்.நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏனையோரை, மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .