2025 ஜூலை 16, புதன்கிழமை

'வயல் வெளி வீதியில் பாலம் வேண்டும்'

George   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி புதுமுறிப்பு சோலைநகர் கிராமத்துக்கும் கோணாவில் கிராமத்துக்கும் இடையில், வயல் வெளி வீதியில் காணப்படும் பெரும் பள்ளத்தில், பாலம் அமைத்துத் தருமாறு சோலைநகர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இக்கிராமத்தில் உள்ள மாணவர்கள், கோணாவில் மகா வித்தியாலயத்துக்குச  இவ்வீதியிலேயே சென்று வருகின்றனர். மழை காலங்களில் புதுமுறிப்பு குளம் வான் பாய்கின்றபோது இப்பகுதியால் செல்வது ஆபத்தாக காணப்படுகின்றது.

புதுமுறிப்புக் குளத்தின் வான்வெள்ளம், குறித்த பள்ளப் பகுதியில் மாணவர்களை இழுத்துச் செல்வதாகவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊர் மக்கள் திரண்டு மாணவர்களை காப்பாற்றி உள்ளதாகத் தெரிவிக்கும் சோலை நகர் மக்கள், குறித்த பகுதியில் பாலம் அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் கரைச்சி பிரதேச செயலாளர் இப்பகுதியை பார்வையிட்டதுடன் பாலம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கரைச்சி பிரதேச செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களிடமும் சோலைநகர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X