2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1,299 ஏக்கர் காணி வனவள திணைக்களத்தின் வசம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 1,299 ஏக்கர் நிலப்பரப்பு, வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே பயிர்ச்செய்கை  மேற்கொள்ளப்பட்ட நிலையில், யுத்த காலத்தில் கைவிடப்பட்டதன் காரணமாக 1,299 ஏக்கர் நிலப்பரப்பு, வனவளத்  திணைக்களத்தால் கைய்யகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ், 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில், பயிர்ச்செய்கை மேற்கள்ளப்பட்டு  பின்னர்,  கைவிடப்பட்ட நிலையில் குறித்த 600 ஏக்கர் வரையான வயல் காணி, வனவளத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்டு, பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன

இதேபோல், வன்னேரிக்குளம் பகுதியில் 549 ஏக்கர் காணிகளும் மலையாளபுரம் பகுதியில் 100 ஏக்கர் காணிகளும் கிருஷ்ணபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா 25 ஏக்கரும் என 1,299 ஏக்கர் நிலப்பரப்பு, வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மேற்படி காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

         

         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .