2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

1,350 கிலோகிராம் மஞ்சள் கட்டிகள் மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பட், சண்முகம் தவசீலன்

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1,350 கிலோகிராம் சமையல் மஞ்சள் கட்டிகளை மண்டபம் மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக சமையல் மஞ்சள்  கடத்த இருப்பதாக, மண்டபம் மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (11) காலை, மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போதே, மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .