Editorial / 2023 மே 09 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
வோட்டர் ஜெல் என்றழைக்கப்படும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 10 கூறுகளுடன் ஏழுவர், மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார், வங்காலை பிரதேசத்துக்கு அப்பாலுள்ள கடலில், திங்கட்கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து வோட்டர் ஜெல் என்றழைக்கப்படும் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கூறுகள் 10, மின்சாரம் இல்லாத டெட்டனேட்டர்கள் 18, சுழியோடுவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மீன்கள் அற்ற நிலையில் வெடி பொருட்கள் மட்டும் உடமையில் இருந்ததால் வங்காலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வங்காலை பொலிஸார் விசாரணையின் பின் குறித்த மீனவர்களை செவ்வாய்க்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .