Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 11 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில், வெள்ள பாதிப்பு காரணமாக பதிக்கப்பட்ட 127 குடும்பங்களை சேர்ந்த 444 பேர், தற்காலிக இடைதங்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக, மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக உள்ள ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், செல்வபுரம், தலைமன்னார், பேசாலை உட்பட அதிக வெள்ளப் பாதிப்புகள் காணப்படும் கிராமங்களில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாக அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெள்ளப் பாதிப்பு மற்றும் காலநிலை மழை வீழ்சி என்பவற்றை கருத்தில் கொண்டு, தொடர்ச்சியாக தற்காலிக இடைத்தங்கள் முகாம்களில் செயற்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
53 minute ago
57 minute ago