2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் 130 வாக்களிப்பு நிலையங்கள்

George   / 2015 ஜனவரி 03 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 130 வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக மக்கள் வாக்களிக்கவுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (02) தெரிவித்தார்.  

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தலில் பணியாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 130 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  06 பிரதேச செயலர் பிரிவிலும் இவ்வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது 50 வாக்களிப்பு நிலையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.  

மாகாண சபைத் தேர்தலின்போது நீண்டதூரங்களுக்கு சென்று மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வாக்களிக்கவேண்டியிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டே ஜனாதிபதி தேர்தலுக்காக 130 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பான கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை 02) எமது செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடாத்தப்படவேண்டும் என்றும் தேர்தலுக்கான ஒழுங்குகள் போன்ற பலவிடயங்கள் ஆராயப்பட்டன.  

அமைக்கப்பட்டுள்ள 130 வாக்களிப்பு நிலையங்களும் மழை வெள்ளப்பாதிப்புகளை எதிர்கொள்ளாமல் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.  
கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது வெளிமாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பணிக்கு  வந்திருந்தார்கள்.  

ஆனால் ஜனாதிபதி தேர்தல் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதன் காரணமாக  மாவட்டத்தின் உத்தியோத்தர்களே கூடுதலாக பணியாற்றவுள்ளார்கள். அதற்கான பயிற்சிகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .