2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறிய இராணுவம்

Freelancer   / 2023 மார்ச் 14 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் வன்னொளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.  

2009 ஆம் ஆண்டில் இருந்து வன்னொளி விளையாட்டுக் கழக மைதானத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர்.  

இதன் காரணமாக விளையாட்டுக் கழகத்தினால் முழுமையாக மைதானத்தினை பயன்படுத்துவதிலும் பொது நிகழ்வுகளை நடாத்துவதிலும் நெருக்கடிகள் காணப்பட்டன. 

கிராம, பிரதேச, மாவட்ட மட்டங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு வழி வகுக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகளும் மனுக்களும் கையளிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் தற்போது வன்னொளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறி உள்ளனர்.

வன்னேரிக்குளத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வன்னேரிக்குளம் விளையாட்டு மைதானத்திலும் ஆனைவிழுந்தான் கிராமத்தின் இராணுவ முகாமிற்காக பெருமளவு நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது மக்களின் இயல்பு வாழ்வினை பாதித்துள்ளதாக உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X