2025 மே 01, வியாழக்கிழமை

’18 ஏக்கரில் படைப்புழு தாக்கம்’

Niroshini   / 2021 ஜனவரி 06 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்;ட சோளப்பயிர்ச் செய்கையில், 18 ஏக்கர் சோளச் செய்கையில், படைப்புழுவின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கனகாம்பிகைக்குளம், ஜெயபுரம், நல்லூர், வன்னேரிகுளம், அக்கராயன் குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளப் பயிர்ச் செய்கையிலேயே, படைப்புழுவின் தாக்கம் அவதானிக்கட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாவட்டத்தில் 160 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது 18 ஏக்கர் நிலப்பரப்பில் படைப்புழுவின் தாக்கத்தை உணரக்கூடியதாகவுள்ளதாகவும் கூறினார்.

இரண்டு வாரம் தொடக்கம் இரண்டு மாதங்கள் வரையிலான பயிர்களிலேயே, இவற்றின் தாக்கம் அவதானிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர்,  விவசாயப் போதனாசிரியர்களின்  வழிநடத்தலில், பல பிரதேசங்களில் படைபுழுவின் தாக்கம்; கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .