Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள கல்மடுக்குளம் தவிர்ந்த ஏனைய எட்டுக் குளங்களின் கீழ் 19 ஆயிரத்து 907 ஏக்கர் நெற்செய்கையும் 1,438 ஏக்கர் நிலப்பரப்பில் உபஉணவுச் செய்கையும் மேற்கொள்வதற்கெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், இரமைணமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது வரையான பாரிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் காலபோகப் பயிர்ச்செய்கைகள் அறுவடை நிறைவு பெற்றுள்ள நிலையில் சிறுபோக பயிர்ச் செய்கைகளுக்கான நடவடிக்ககைள், விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்மடுக்குளம் தவிர்ந்த ஏனயை குளங்களின் கீழான பயிர்ச் செய்கை தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு, பயிர்ச் செய்கைகளுக்கான பன்படுத்தல் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
அதாவது, மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் கீழ், 15 ஆயிரத்து 150 ஏக்கர் நெற்செய்கையும் 500 ஏக்கர் நிலப்பரப்பில், சிறுதானிய செய்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு அதற்கான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோன்று அக்கராயன் குளத்தின் கீழ் 2,790 ஏக்கர் நெற்செய்கையும் 248 ஏக்கர் உபஉணவுச் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
குடமுருட்டிக்களத்தின் கீழ் 400 ஏக்கர் நெற்செய்கையம் வன்னேரிக்குளத்தின் கீழ் 183 ஏக்கர் நெற்செய்கையும் கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ் 565 ஏக்கர் நெற்செய்கையும் புதுமுறிப்பக்குளத்தின் கீழ் 819 ஏக்கர் நெய்செய்கையம் பிரமந்தனாறுக்குளத்தின் கீழ் 450 ஏக்கர் உபஉணவுச் செய்கையும் கனகாம்பிகைக்குளத்தின் கீழ் 240 ஏக்கரும் உள்ளடங்கலாக இதுவரை நடைபெற்ற பயிர் செய்கை கூட்டங்களின் படி, 19 ஆயிரத்து 907 ஏக்கர் நெற்செய்கையும் 1,438 ஏக்கர் சிறுதானிய செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கல்மடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்செய்கை தொடர்பான கூட்டம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago