2025 ஜூலை 23, புதன்கிழமை

‘2,000 குடும்பங்களுக்கு காணிகள் தேவை’

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, காணிகளை வழங்க வேண்டிய தேவையிருப்பதாக, கண்டாவளைப்பிரதேச செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளைப்பிரதேசத்தில் உள்ள 16 கிராம  அலுவலர் பிரிவுகளில் சுமார் 8,314 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

“இப்பிரதேசத்தில் 2, 221 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே யுத்தத்தின் போது பிரதேச செயலகத்தில்  கோவையிடப்பட்டிருந்த ஆவணங்கள் தொலைந்தமையால் 1,142 பயனாளிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் 332  பயனாளிகளுக்கான அழிப்புப்பத்திரங்களும் அலுவலகப்பிரதி ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.

“90 பயனாளிகளுக்கு  ஆவணங்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் (காணிக்கச்சேரிகள்) மேற்கொள்ளப்படவுள்ளன. ஏற்கெனவே பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் 1,803 பேரும் அரச காணிகளில் 255 பேரும் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கான காணிகளையே வழங்கவேண்டியுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .