2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் இடம்பெறும் திடீர் மின் தடையினால் பொதுமக்கள் பாதிப்பு

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு, பகல் பாராது நாளாந்தம் மின் தடங்கல் ஏற்படுவதினால் மன்னார் மாவட்ட மக்களும் மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திடீர் என மின்சாரம் தடைப்பட்டு வருகின்றது. இதனால் மின் பாவனையாளர்களது விலையுயர்ந்த மின் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாகவும் மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது முஸ்ஸிம்கள் புனித நோன்பினை அனுஷ்ஸ்ரித்து வருகின்ற நிலையில் அதிகாலை நேரங்களில் மின் தடங்கள் ஏற்படுகின்றமையினால் புனித நோன்புக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

இதேவேளை எதிர்வரும் மாதம் தரம் 5ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது இரவு நேரத்தில் திருடர்களின்  நடமாட்டம்  அதிகரித்துள்ளமையினால் மக்கள் அச்ச நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு நாளந்தம் பல மணி நேரம் மின் தடங்கள் ஏற்படுகின்ற போதும் மாதம் முடிவில் அதிகரித்த மின் பட்டியல் வருவதாகவும் மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் பிரதம மின் பொரியியலாளர் எஸ்.பிரபாகரனை தொடர்புகொண்டு கேட்ட போது,

"மன்னார் தொடக்கம் புத்தளம் வரையில் உள்ள அதியுயர் மின் கோபுரங்ளில் உள்ள மின் கம்பிகளில் காபன் மற்றும் உப்பு படிவதினால் அடிக்கடி மின் தடங்கள் ஏற்படுகின்றது.  இந்த பிரச்சினை ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் இடம் பெறுகின்றது. இயற்கைக்கு எதிராக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .