2025 ஜூலை 30, புதன்கிழமை

தேர்தல் காலத்தில் இறைக்கப்படும் பணத்திற்கு விலைபோக வேண்டாம்: சூசை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'தேர்தல் காலங்களில் பல அமைச்சர்களினாலும் அரசியல்வாதிகளினாலும் அள்ளி இறைக்கின்ற பணத்திற்காக விலை போகவேண்டாம்'என மன்னார் மாவட்ட மீனவ ஒத்தழைப்பு பேரவையின் இனைப்பாளரும் முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளருமான ஏ.சுனேஸ் சோசை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

'யுத்தத்தின் பிற்பாடு வெளியேற்றப்பட்ட தழிழ், முஸ்ஸிம் மக்கள் இன்னமும் தங்களின் சொந்த வாழ்விடத்திற்கும் சொந்தக் காணிகளுக்கும் சென்று மீள்குடியேற முடியாத நிலையில் காட்டிற்குள்ளும் முகாமிற்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது.

வடபகுதி மக்களின் காணிகளை இராணுவத்தினர் தங்களின் பாதுகாப்பிற்காக பறித்து வைத்துள்ளனர்.

அரச கட்சியில் தேர்தலில் போட்டி இட்டு மக்களின் வாக்குகளை பெற்று தற்போது அமைச்சர்களாக இருப்போருக்கு அரசியல் வாதிகளாக இருப்போருக்கும் மக்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு முடியாதா? அல்லது அரசாங்கத்திற்கு நீங்களும் விலை போய் விட்டீர்களா?

அனைத்து இன மக்களும் தமது கலாசார மரபுகளை பேணி சுதந்திரமாக வாழும் உரிமையும் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையும் உடையவர்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அன்பிற்கினிய வடபகுதி தமிழ் முஸ்ஸிம் உறவுகளே. அற்பத்தனமான பொருட்களுக்காகவும் அற்பத்தனமான வேலைக்காகவும் பிரஜைகளாகிய நீங்கள் விலை போகவேண்டாம்.

தேர்தல் காலங்களில் பல அமைச்சர்களினாலும் அரசியல்வாதிகளினாலும் அள்ளி இறைக்கின்ற பணத்திற்காக விலை போகவேண்டாம்.

இன்று எமது பகுதியில் என்ன நடக்கின்றது. படித்த பட்டம் பெற்ற எத்தனையோ தமிழ் முஸ்ஸிம் இளைஞர் யுவதிகள் காணப்படுகின்ற போதும் எமது பகுதியில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி இருக்கின்றார்கள்? சற்று சிந்தியுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .