2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் இன்று தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.றொசேரியன் லெம்பேட்


தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார் தமிழ்ச் சங்கம் மன்னாரில் ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வில் இலக்கிய அரங்கு, கலை அரங்கு என மூன்று நடைபெறவுள்ளன.

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் காலை  10 மணிக்கு ஆரம்பமாகிய இன்றைய நிகழ்வில்;, சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம்;, வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மோகநாதன்;, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் உருவச் சிலை மன்னார் ஆயர் இரா. யோசேப்பு ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .