2025 ஜூலை 30, புதன்கிழமை

சிலாவத்துறை தபாலகத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்  மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிலாவத்துறை தபாலகத்தினை சகல வசதிகளும் கொண்ட நவீன தபாலகமாக தரமுயர்த்துமாறு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனினால் தபால் மற்றும் தொலைதொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுக்கு  அமைச்சர் றிசாதினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"தற்போது மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேறி வருகின்றனர். இந்த பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 50 வருடம் கொண்ட சிலாவத்துறை தபாலகத்தினை தரமுயர்த்தி சகல வசதிகளையும் ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் பெரும் நன்மையடைவார்கள்.

மறிச்சுக்கட்டி தொடக்கம் உள்ள கிராமங்களில் உள்ள  மக்கள் தபால் சேவைகளுக்காக சில சந்தர்ப்பங்களில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருங்கன் தபாலகத்துக்கு செல்ல நேரிடுவதாக எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .