2025 ஜூலை 30, புதன்கிழமை

அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த ரயில் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


கிளிநொச்சி, அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர்வரை வந்தடைந்தது. 

இது இவ்வாறிருக்க,  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே ரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடைபெறுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .