2025 ஜூலை 30, புதன்கிழமை

'தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள்'

Super User   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த 30 வருடங்கள் பல்வேறு இன்னல்களை அடைந்த தமிழ் மக்கள் தமது சுய உரிமையையும் கௌரவத்தையும் பெற்றுக்கொள்ளும் தருனமாக வட மாகான சபைத் தேர்தல் அமைந்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் இருதயநாதன் சாளஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒட்டு மொத்த தமிழர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின் அணிதிரண்டு தமிழர்களின் பலத்தை இந்த அரசிற்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நடைபெறவிருக்கும் வட மாகாண சபை தேர்தலை உலக நாடுகள் மிகவும் நுன்னியமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த 30 வருடங்களாக எமது தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள இந்த வட மாகாண சபை தேர்தல் எமக்கு களம் அமைத்துள்ளது.

தமிழ் மக்களின் சுய உரிமையை வென்றெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்று வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களையும் இழப்புக்களையும் எம்மால் கணக்கிட முடியாது. ஆனால் இந்த தேர்தலின் ஊடாக இறந்த உறவுகளின் கனவுகளை நினைவாக்க அணிதிரண்டு போராட முடியும்.

எமது மக்களை அடிமைகளாக்கி வேடிக்கை பார்க்கும் இந்த அரசிற்கு தமிழர்களின் பலம் என்ன என்று காட்ட வேண்டும். நாங்கள் சலுகைகளுக்கு அடிமைகளாகி விடக்கூடாது. மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்படுகின்ற சகல வித வேலைத்திட்டங்களும் பக்கச்சார்புடன் இடம்பெற்று வருகின்றது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .