2025 ஜூலை 30, புதன்கிழமை

'பிழையான சக்திகளிடம் மாகாணசபை சென்றால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'அரசின் கூலிக்கு அரசியல் செய்யும் பிழையான சக்திகளிடம் மாகாணசபை சென்றால் என்ன நடக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டிய நேரமாக இது உள்ளது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் புதுக்காமத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வடமாகாணசபை தேர்தலை எமது மக்கள் சரியாக பயன்படுத்தி தமது இருப்பையும், அடையாளத்தையும் பாதுகாப்பதுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்கள், அழிவுகள், உயிர்தியாகங்களுக்கு ஈடான பூரண சுதந்திரத்தையும் நிரந்தரமான தீர்வையும் ஏற்படுத்தும் தளமாகவும், களமாகவும் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அரசின் கூலிக்கு அரசியல் செய்யும் பிழையான சக்திகளிடம் மாகாணசபை சென்றால் என்ன நடக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டிய நேரமாகவுள்ளது.

நாம் இத்தேர்தலில் போட்டியிடாது விட்டால் எமது உரிமைக்காக நடந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி அரசியல் இடைவெளியை அதிகரிக்கச் செய்து இன்னும் அறுபது ஆண்டுகள் தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பவர்களுக்கு வழியை ஏற்படுத்தி விடும்.

ஆகவேதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலை பயன்படுத்துவதோடு முதலமைச்சர் வேட்பாளர் உட்பட பல்துறைகளையும் உள்ளடக்கிய தரமான வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது'

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .