2025 ஜூலை 30, புதன்கிழமை

மதுராநகர் கிராமத்திற்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபிலநாத்


வவுனியா மாவட்டத்தின் மதுராநகர் கிராமத்திற்கு சுமார் 8 வருடங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் மற்றும்; சிதம்பரபுரம் நலன்புரி நிலையங்களிலிருந்து குடியேற்றம் செய்யப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மதுராநகர் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர்.

மதுராநகர் கிராமத்திற்கு மின்சாரம் இல்லாமை தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் கவனத்திற்கு சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து மதுராநகர் கிராமத்திற்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மதுராநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .