2025 ஜூலை 30, புதன்கிழமை

மாந்தை கிழக்கிலுள்ள வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் மக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள ஒரேயொரு வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் தாதியர்கள் இன்மையால் பொதுமக்கள் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதலைவர் திரு.சி.செந்தூரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்றத்தின் பின் பல்வேறுபட்ட தரப்பினரின் வேண்டுதலுக்கு அமைய கடந்த 7    மாதங்களாக தற்காலிக அடிப்படையில் இந்த வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர்  வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து முழுநேர வைத்திய சேவையினை இப்பகுதி மக்களுக்கு அவர் வழங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும் தற்போது இந்த வைத்தியசாலையின் வைத்தியர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சீரான வைத்திய சேவையினை பெறமுடியாது பொதுமக்கள் சிரமத்திற்கு முகம்கொடுப்பது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடு கிடைத்தவண்ணம் உள்ளதாகவும் அவர் கூறினார். 

இது தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரியிடமும் அரசாங்க அதிபரிடமும் எமது பிரதேசம் என்ற ரீதியில் சீரான வைத்திய சேவை கிடைப்பதற்கு ஆவன செய்யுமாறு தம்மால் கோரிக்கை விடப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .